நியூயார்க் நகரில்
தமிழ்வழி சிகிச்சை

உங்களை மிகச்சிறந்த நபராக மாற்றிட நாங்கள் உதவுகிறோம்.

உங்களுக்குப் பொருத்தமான நியூயார்க் சிகிச்சையாளரைத் தேர்வு செய்ய உதவுகிறோம்

உங்கள் இலக்குகள், நேர அட்டவணை, சிகிச்சை முறை விருப்பங்கள் மற்றும் அடையாளம் சார்ந்து கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களைப் பகிருங்கள். உங்களுக்கு மிகப் பொருத்தமான உரிமம் பெற்ற நியூயார்க் சிகிச்சையாளரை நாங்கள் பரிந்துரைப்போம், எனவே நீங்கள் முதலிலிருந்து தேட ஆரம்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. 94%க்கும் மேற்பட்ட பயனாளிகள் தாங்கள் பெற்ற சிகிச்சை குறித்து முழுமையாக திருப்தியடைந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

தமிழில் நன்கு பேசக்கூடிய சிகிச்சையாளரைத் தேர்வு செய்வது பயனுள்ள மற்றும் ஆதரவு நிறைந்த சிகிச்சை அனுபவத்தைப் பெறுவதற்கு முக்கியமானதாக இருக்கலாம். உங்கள் தாய் மொழியில் ஆலோசனை சிகிச்சையில் ஈடுபடும்போது, அது தெளிவான தகவல் பரிமாற்றத்திற்கு உதவுவது மட்டுமல்லாமல் பாதுகாப்பு உணர்வையும் புரிதலையும் உண்டாக்குகிறது. உங்கள் எண்ணங்களையும் உணர்வுகளையும் உங்களுக்குப் பரிட்சயமான மற்றும் சௌகரியமான மொழியில் வெளிப்படுத்த முடியும்போது, தனிப்பட்ட சவால்களை ஆராய்ந்து அறியும் உங்கள் மனப்போக்கு குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கும். இவ்வாறு தாய்மொழியில் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும்போது, ஆழமான புரிதலையும் ஒத்துணர்வையும் பெற அவசியமான கலாச்சார நுணுக்கங்களையும் சூழலையும் கூட சிகிச்சையாளரால் புரிந்துகொள்ள முடியும், இதனால் சிகிச்சை நடைமுறை இன்னும் பயன்மிக்கதாய் அமையும்.

தமிழ் பேசும் சிகிச்சையாளர்கள்

சஞ்சனா கிருஷ்ணன்

MA, LMHC | மூத்த சிகிச்சையாளர்

வாழ்க்கையின் ஆழமான அனுபவங்களில் துன்பமும் அடங்கியிருக்கிறது. சிகிச்சை என்பது உங்களுடனான உறவை விரிவுபடுத்தும் மற்றும் ஆரோக்கியமான பகுத்தறிவை வளர்க்கும் சூழலாக இருக்க முடியும் என்று நான் நம்புகிறேன். ஒரு சிகிச்சையாளராக உங்கள் வாழ்க்கையின் பல பரிமாணங்களைப் பார்த்து, புரிந்து கொள்வதற்கு நமக்கான ஓர் சூழலை உருவாக்குகிறேன். இவற்றுள் உங்கள் உணர்ச்சிகள், எண்ணங்கள், நடத்தைகள்; உங்களைப் பற்றிய கடந்த கால, நிகழ்கால மற்றும் எதிர்கால விஷயங்கள்; மனம், உடல் மற்றும் ஆன்மா உள்ளிட்டவை அடங்கும். உங்கள் வாழ்க்கையை வாழ்வது நீங்கள்தான் என்பதை நான் மதிப்பதோடு, நாம் மேற்கொள்ளும் சிகிச்சையில் உங்களின் உள்ளார்ந்த அறிவை நீங்கள் பகிர்ந்து கொள்வதையும் வரவேற்கிறேன்.  ஆழ்ந்த கண்ணோட்டங்களைத் தரக்கூடிய வகையிலும், உணர்வுகளைப் பகிர்ந்து மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையிலும் மகிழ்ச்சியூட்டும் தன்னம்பிக்கையைத் தரும் சிகிச்சை சூழலை உருவாக்கிட முயற்சிக்கிறேன். உங்கள் அனுபவங்களைப் புரிந்துகொள்ள மற்றும் நீங்கள் மன ரீதியாக குணமடைய உதவும் வகையில் உடல், உணர்ச்சி, சிந்தனை மற்றும் வெளிப்பாட்டுக் கலை சார்ந்த முறைகளை எனது ஆலோசனை சிகிச்சையில் சேர்த்து பயன்படுத்துகிறேன்.

நியூயார்க் பல்கலைக்கழகத்தில் மனநல ஆலோசனைத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள நான், பால்புதுமையினரை (LGBTQ*) அங்கீகரிக்கும் சிகிச்சையில் (Affirming Therapy) சிறப்புப் பட்டமும் பெற்றுள்ளேன். புது தில்லியில் உள்ள ஃபோர்ட்டிஸ் மருத்துவமனை மற்றும் யுனெஸ்கோ சிஐடி (சர்வதேச நடனக் குழு) ஆகியவற்றால் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு கூட்டுத்திட்டத்தின் மூலம் வெளிப்பாட்டுக் கலை சார்ந்த சிகிச்சை (Expressive Arts-Based Therapy) துறையிலும் முறையான பயிற்சி பெற்றுள்ளேன். 2017-ஆம் ஆண்டு, இந்தியாவில்  ‘Okay; Not Okay’ என்ற பெயரில் ஒரு கூட்டு மனநல விழிப்புணர்வுத் திட்டத்தை நான் நிறுவினேன். காட்சி ரீதியான கலை மற்றும் கதை சொல்லல் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த இத்திட்டம், மனநல ஆரோக்கியம் குறித்து மக்கள் மத்தியில் நிலவிய தயக்கங்களையும் தனிமையையும் போக்கி, மனநலம் குறித்து ஆரோக்கியமான உரையாடல்களை மேற்கொள்வதற்கான சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. இத்திட்டத்தின் மூலம் சமூகப் பிணைப்பும், அவற்றின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளும் சுகாதார சேவைகளின் அணுகலை எளிதாக்குவதில் வகிக்கும் பங்கை நான் புரிந்து கொண்டேன். இதன் மூலம் மனித உறவுகள் குறித்து எனக்குக் கிடைத்த எனது பார்வைகளை, இரண்டு TEDx உரைகள் வாயிலாகப் பகிர்ந்து கொள்ளவும், உலகளவில் மாற்றத்தை ஏற்படுத்தும் சமூகத்தில் இணையவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது.

தீராத வலியுடன் பால்புதுமையின இந்தியப் பெண்மணியாக நான் பெற்ற தனிப்பட்ட அனுபவம், எனக்கு நுணுக்கமான நகைச்சுவை உணர்வையும் ஆழ்ந்த பரிவையும் அளித்துள்ளது. தற்போது எனது தாயகமாக விளங்கும் நியூயார்க் நகரம், நான் வசிக்கும் மூன்றாம் நாட்டின் நான்காவது நகரமாகும். கலாச்சாரப் பன்முகத்தன்மையும் நரம்பியல் வளர்ச்சியில் இருக்கும் வேறுபாடுகளும் எனது சிகிச்சைத் தத்துவங்களின் அடிப்படை அம்சங்களாகும். இவை எனது சொல்லகராதியில் இணைவதற்கு முன்பே, எனது வாழ்வியல் அனுபவங்களாக இருந்துள்ளன. ஆங்கிலம் மட்டுமின்றி, தமிழ் மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் நான் சிகிச்சை சேவைகளை வழங்குகிறேன்.

பணிபுரியாத நேரங்களில், புத்தகம் வாசிப்பது, பல விதமான இசைகளுக்கு நடனமாடுவது, ஓவியம் தீட்டுவது மற்றும் படங்கள் தொகுப்பது அல்லது இயற்கையோடு இணைந்து நேரத்தைச் செலவிடுவது ஆகியவற்றில் ஆர்வம் கொண்டு, அவற்றில் நேரம் செலவிடுகிறேன்.

Two women talking at Cobble Hill Therapy.

பேசுவது நல்லது

உங்கள் மனநிலை எவ்விதம் இருந்தாலும், சிகிச்சையானது உங்களுக்குத் தெளிவான, அடையக்கூடிய முன்னேற்றப் பாதையை வழங்கும். பயனில்லாத சிந்தனை மற்றும் நடத்தை முறைகளை அடையாளம் கண்டு, அவற்றை மாற்ற உதவுகிறோம், எனவே நீங்கள் நிலைத்த மனநிலையுடன், தன்னம்பிக்கையுடன், உங்களை நீங்கள் மீண்டும் உணர முடியும். நியூயார்க்கை மையமாகக் கொண்ட எங்கள் சிகிச்சையாளர்கள் தங்களின் பல ஆண்டு கால அனுபவத்தின் மூலம் தனிநபர்கள், தம்பதிகள் மற்றும் குடும்பங்களுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர், மேலும் அனைவரின் உணர்வுகளும் புரிந்துகொள்ளப்படும், மதிக்கப்படும் மற்றும் ஆதரிக்கப்படும் சூழலை உருவாக்கிட நாங்கள் உறுதி பூண்டுள்ளோம்.

ஆதாரபூர்வமான சிகிச்சையுடன் கலாச்சாரத்தை மதிக்கும், பரிவுமிக்க பராமரிப்பை வழங்கும் அணுகுமுறையை நாங்கள் கடைபிடிக்கிறோம். அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தக்கூடிய நடைமுறை கருவிகள் மற்றும் நிரூபிக்கப்பட்ட உத்திகளில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். வெறுமனே புரிதல் மட்டுமின்றி, உண்மையான மாற்றத்தை ஏற்படுத்துவதே எங்களின் நோக்கமாக உள்ளது. நீண்ட காலம் சிகிச்சையை நாடியிருக்க வேண்டிய சூழலை உண்டாக்குவது எங்களின் நோக்கம் அல்ல. உங்களுக்கு உதவியாக இருக்கும் வரையில் எங்களின் சேவைகளைப் பெற்று, பின்னர் நீங்கள் தன்னம்பிக்கை பெற்று, திறமையுடன், தனியாக முன்னேறிச் செல்லக்கூடிய நிலைக்குச் செல்ல வேண்டும் என்பதே எங்களது விருப்பம்.

எங்கள் நியூயார்க் நகர சிகிச்சை அலுவலகத்திற்கு வருகைப் புரியுங்கள்

எங்கள் தனியார் சேவை மையம் மன்ஹாட்டனில் அமைந்துள்ளது, நியூயார்க் நகரம் முழுவதிலும் இருந்து சப்வே அல்லது கார் மூலம் எங்கள் அலுவலகத்தை எளிதாக அணுகலாம். எங்கள் அலுவலகம் அமைதியான சூழலில், வரவேற்கும் வகையில், தனிமையில் கலந்துரையாடக்கூடிய வசதியுடன் அமைந்துள்ளது, எனவே நீங்கள் சௌகரியமாக உணருவதோடு, உங்கள் அமர்விலும் கவனம் செலுத்தலாம். நியூயார்க் மாநிலம் முழுவதிலும் உள்ளவர்களுக்கு பாதுகாப்பான முறையில் இணையவழி சிகிச்சையையும் வழங்குகிறோம்.

எங்கள் முகவரி

37 மேற்கு 20வது ஸ்ட்ரீட், நியூயார்க், NY 10011

ஃபிளாட்டிரான்/செல்சி பகுதியில் அமைந்துள்ளது

Citron Hennessey waiting room and therapy suites

உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கிறோம்

ஆரம்பம் முதலே நீங்கள் நிம்மதியாகவும், ஆதரவுடன் மற்றும் தன்னம்பிக்கையுடன் உணரும் விதமாக சரியான சிகிச்சையாளரை உங்களுக்குத் தேர்வு செய்ய கடுமையாகப் பணியாற்றுகிறோம். எங்களின் சிகிச்சையாளர்கள் இயல்பான தொழிற்துறை தரநிலைகளையும் தாண்டி மிகவும் பயிற்சி பெற்றவர்கள். அவர்கள் உங்கள் தேவைக்கு உண்மையாகப் பொருந்தும் பராமரிப்பை வழங்க உணர்ச்சி ரீதியான நுண்ணறிவையும் பல்வேறு விதமான சிகிச்சை முறைகளையும் பயன்படுத்துகின்றனர்.

நாங்கள் பரிவுமிக்க, பாதுகாப்பான மற்றும் ஆதரவு நிறைந்த சூழலை வழங்குகிறோம், இச்சூழலில் நீங்கள் வெளிப்படையாக பேசலாம், உங்கள் கருத்துக்கள் புரிந்துகொள்ளப்படுவதை உணரலாம். ஒவ்வொரு அமர்வும் கவனத்துடனும் மரியாதையுடனும் நடத்தப்படுகிறது, இது நீங்கள் சரியென நினைக்கும் வேகத்தில், நம்பிக்கையை வளர்க்க, தெளிவைப் பெற, அர்த்தமுள்ள முன்னேற்றத்தை அடைய உதவுகிறது. 

எங்கள் பயனாளிகள் ஆதரவுக் குழு அற்புதமாக செயல்பட்டு வருகிறது!

A person participates in therapy.

நாங்கள் உதவும் முறைகள்

தமிழ்மொழி பேசும் நியூயார்க் சிகிச்சையாளர்களைக் கொண்டு ஆதாரம் அடிப்படையிலான சிகிச்சை

மன்ஹாட்டன் பகுதியில் தனியார் சேவையை வழங்கி வரும் நாங்கள், உரிமம் பெற்ற நியூயார்க் சிகிச்சையாளர்களைக் கொண்டு தனிநபர்களுக்கும் தம்பதிகளுக்கும் சிகிச்சை வழங்கி வருகிறோம். உங்கள் இலக்குகளுக்கும் வாழ்க்கை அனுபவத்திற்கும் ஏற்ப வடிவமைக்கப்பட்ட ஆதாரம் அடிப்படையிலான அணுகுமுறைகளை எங்கள் மருத்துவர்கள் பயன்படுத்துகின்றனர், இவற்றுள் புலனுணர்வு சார்ந்த நடத்தை சிகிச்சை மற்றும் மனந்தெளிநிலையை அடிப்படையாகக் கொண்ட பராமரிப்பு உள்ளிட்டவை அடங்கும். அமர்வுகள், 37 மேற்கு 20வது ஸ்ட்ரீட் என்ற முகவரியில் உள்ள எங்கள் ஃபிளாட்டிரான் மற்றும் செல்சி அலுவலகத்தில் நேரடியாகவும் அல்லது நியூயார்க் மாநிலத்தில் எங்கிருப்பினும் இணையம் வாயிலாகவும் கிடைக்கப்பெறுகின்றன.

எங்கள் சிகிச்சையாளர்கள் நியூயார்க் பயனாளிகளுக்கு உதவக்கூடிய பிரச்சனைகள்

  • கவலை, பீதி, மன அழுத்தம் மற்றும் பரிபூரணத்திறம்
  • மனச்சோர்வு, துக்கம் மற்றும் வாழ்க்கை மாற்றங்கள்
  • உறவுமுறை மற்றும் தம்பதியர் பிரச்சனைகள்
  • பெருவிருப்பக் கட்டாய மனப்பிறழ்வு
  • கோபம், சுயத்தை மதிக்கும் இயல்பு மற்றும் பால்புதுமையினரை (LGBTQ*) அங்கீகரிக்கும் பராமரிப்பு உட்பட அடையாளத்தை ஆய்ந்து அறிதல்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

காப்பீடு

எனது காப்பீட்டை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?
  • காப்பீடு என்பது சிக்கலான விஷயம்! இரண்டு காப்பீட்டுத் திட்டங்களும் ஒன்றாக இருப்பதில்லை. உங்கள் காப்பீட்டுத் திட்டம் வழங்கும் பலன்களைப் புரிந்துகொள்வது உங்களுக்குப் பதட்டத்தையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தலாம்! அந்த வேலைகளை எங்களிடம் விட்டுவிடுங்கள். உங்கள் காப்பீட்டுத் திட்டத்தின் பலன்களைச் சரிபார்த்து, நீங்கள் நேரடியாக செலுத்த வேண்டிய செலவுகள் என்னவென்பதைத் தெரிந்துகொள்ள எங்களின் நட்பு ரீதியான ஆதரவுக் குழுவைத் தொடர்புகொள்ளுமாறு பரிந்துரைக்கிறோம்.
  • நெட்வொர்க் வழங்குநருக்கு அப்பாற்பட்ட முறையில், நாங்கள் பெரும்பாலான PPO மற்றும் சில POS திட்டங்களுடன் பணி செய்து வருகிறோம். இதில் Aetna, Cigna மற்றும் United Healthcare (மற்றும் பல) அடங்கும்.

  • எந்தக் காப்பீடும் இல்லாமல், சிகிச்சை பெறுவதற்கு ஓர் அமர்வுக்குப் பொதுவாக $150 முதல் $275 வரை செலவாகும், இது நீங்கள் தேர்வு செய்யும் சிகிச்சையினைப் பொறுத்தது.
  • சிகிச்சை பெறுவதற்குப் பணம் தடையாக இருப்பதை நாங்கள் விரும்பவில்லை: நல்ல மனநலப் பராமரிப்பு என்பது ஒரு சலுகையாக இருக்கக்கூடாது. எங்களிடம் அற்புதமான நவீன மருத்துவப் பயிற்சித் திட்டம் உள்ளது, இதன் மூலம், எங்களின் சாதாரண கட்டணத்தை வழங்க முடியாதவர்களுக்கு அல்லது காப்பீட்டை பயன்படுத்த முடியாதவர்களுக்கு சிகிச்சை சேவையை வழங்க முடிகிறது.

சிகிச்சை

நான் எவ்வளவு விரைவாக தொடங்கலாம்?
  • ஆரம்ப மதிப்பீட்டிற்குப் பிறகு, பெரும்பாலானவர்களுக்கு அவர்களின் நேர அட்டவணைக்குப் பொருந்தும் வகையில் அடுத்து கிடைக்கும் நேரம் வழங்கப்படும், இது பொதுவாக சில நாட்களுக்குள் இருக்கும்; அத்துடன் இது சிகிச்சையாளர் கிடைக்கப்பெறும் நேரத்தையும் பொறுத்திருக்கும்.
  • சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், நீங்கள் விரும்பும் அளவுக்கு வரலாம்! ஆனால், எங்களின் உதவியின்றி உங்களின் வாழ்க்கையை சிறப்பாக வாழ உதவுவதே எங்களின் நோக்கம். பெரும்பாலானவர்கள் சில அமர்வுகளிலேயே அறிகுறிகளில் முன்னேற்றம் காண்கிறார்கள், ஆனால் நல்ல மாற்றங்களைப் பெறுவதற்கு அதிக நேரம் தேவைப்படலாம். இது ஒவ்வொருவரையும் பொறுத்து மாறுபடும்.

  • இரண்டும் பயனுள்ளதே. நேரடி அமர்வுகள் உடல்மொழி மற்றும் உணர்வுகளை நன்றாகப் புரிந்து கொள்ள உதவும், கவனம் செலுத்தக்கூடிய சூழலை வழங்கும்; இணையவழி அமர்வுகள் நியூயார்க் மாநிலத்தில் நீங்கள் எங்கிருந்தாலும் கலந்து கொள்ள உதவும். பலர் இரண்டையும் கலந்து பயன்படுத்துகின்றனர்.
  • ஆம், எங்கள் நியூயார்க் நகர சிகிச்சையாளர்கள் மாநிலம் முழுவதும் பாதுகாப்பான இணையவழி சிகிச்சையினை வழங்குகின்றனர், எனவே நீங்கள் புரூக்ளின், குயின்ஸ், ப்ராங்க்ஸ், மன்ஹாட்டன், இசுடேட்டன் தீவு அல்லது நியூயார்க் மாநிலத்தில் எங்கிருந்தும் கலந்து கொள்ளலாம்.

  • நாங்கள் நியூயார்க் நகரத்தில் நேரடி சிகிச்சையை வழங்குகிறோம்; ஒரு சிறு படிவத்தைப் பூர்த்திச் செய்யுங்கள், உங்களுக்குப் பொருத்தமான சிகிச்சையாளரையும் இடத்தையும் நாங்கள் உங்களுக்குப் பரிந்துரைக்கிறோம்.

  • உங்களுக்கு மிகச் சிறந்த பராமரிப்பை வழங்க விரும்புகிறோம். நீங்கள் புது விதங்களில் சிந்திப்பதற்குக் கற்றுக் கொள்வீர்கள். பிற திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கு மீண்டும் மீண்டும் பயிற்சி செய்வது எவ்வளவு முக்கியமோ, அதே போல இதற்கும் பயிற்சி முக்கியம், குறிப்பாக ஆரம்பத்தில் முக்கியம். உங்கள் சிகிச்சையாளரை வாரத்திற்கு ஒருமுறை பார்ப்பது பயனுள்ளதாக இருக்குமென ஆய்வுகள் காட்டுகின்றன. இரண்டு வாரத்திற்கு ஒருமுறை கலந்து கொள்ளப்படும் அமர்வுகள் இதே பலன்களை வழங்குவதில்லை, உங்கள் பணத்தையோ நேரத்தையோ நாங்கள் வீணடிக்க விரும்பவில்லை.

  • உங்களின் முதல் சந்திப்பு 1 மணிநேரம் நீடிக்கும். மற்ற எல்லா அமர்வுகளும் சுமார் 50 நிமிடங்கள் நீடிக்கும்.
  • நீங்கள் சிந்திக்கும், நடந்து கொள்ளும் மற்றும் உணரும் விதத்தின் முழுக் கட்டுப்பாடு உங்களிடமே உள்ளது என்று நாங்கள் நம்புகிறோம். நாங்கள் பயன்படுத்தும் சிகிச்சை முறைகள் உங்களுடைய சிறந்த வாழ்க்கையைத் தேர்வு செய்ய உதவும்.

  • இந்த அணுகுமுறைகள் ஆய்வுகளின் மூலம் ஆதரிக்கப்படும் சிகிச்சை முறைகளின் வகையினைச் சார்ந்தவை. அவை: புலனுணர்வு நடத்தை சார்ந்த சிகிச்சை, தர்க்கபூர்வ உணர்ச்சி நடத்தை சார்ந்த சிகிச்சை, ஏற்பு மற்றும் அர்ப்பணிப்பு சிகிச்சை மற்றும் தேர்வுக் கோட்பாடு, உண்மைநிலை சிகிச்சை உள்ளிட்டவை அடங்கும்.

  • எங்கள் சேவை நிலையத்தில் உள்ள சிகிச்சையாளர்களும் மனநல உளவியலாளர்களும் மருந்தினை பரிந்துரைக்க அனுமதிக்கப்படவில்லை, ஆனால் தேவையானபோது ஒருங்கிணைந்த சிகிச்சையை வழங்க அங்கீகரிக்கப்பட்ட மனநல மருத்துவர்கள் மற்றும் மனநல செவிலியர்களுடன் நாங்கள் நெருங்கிப் பணியாற்றுகிறோம்.

  • பாதுகாப்பான மற்றும் முறையான சிகிச்சையை உறுதி செய்ய, கீழ்கண்ட மருத்துவப் பிரச்சனைகளுக்கு நாங்கள் சிகிச்சை வழங்க முடியாது, ஏனெனில் அவற்றுக்கு சிறப்புப் பயிற்சி மற்றும் கூடுதல் ஆதரவு சேவைகள் தேவைப்படுகின்றன; அவற்றை CHT ஆல் வழங்க முடியாது:
  • கடந்த 12 மாதங்களில் தற்கொலை முயற்சி

  • தனக்குத்தானே தீங்கு விளைவித்துக் கொள்ளும் தீவிர நடத்தை

  • பசியற்ற உளநோய் (அனோரெக்ஸியா) மற்றும் இயற்கைக்கு மீறிய பெரும் பசி (புலிமியா)

  • ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு (மனயிறுக்கக் கோளாறு)
  • விளிம்புநிலை ஆளுமைக் கோளாறு

  • மதுபானம் அல்லது போதைப்பொருள் அடிமை
  • இருமுனையக் கோளாறு 1

  • இருமுனையக் கோளாறு 2 (மருந்து இல்லாமல் இருக்கும்போது)
  • மனச்சிதைவு நோய் (ஸ்கிசோஃப்ரினியா) மற்றும் உளநோய்
  • மனநிலை பிரச்சனை தொடர்பான மருத்துவமனை அனுமதிப்பு (கடந்த 12 மாதங்களுக்குள்)

சிகிச்சையாளர்கள்

எனக்குப் பொருத்தமான நியூயார்க் சிகிச்சையாளர் அல்லது சேவையை நான் எப்படி கண்டுபிடிப்பது?
  • சுருக்கமான ஆரம்ப மதிப்பீட்டிற்கு பிறகு, உங்களது இலக்குகளுக்குப் பொருத்தமான ஒரு நியூயார்க் நகர சிகிச்சையாளரையும் சிகிச்சை முறையையும் நாங்கள் உங்களுக்குப் பரிந்துரைப்போம். அவர் உங்களுக்குப் பொருத்தமாக இல்லையெனில், எந்தத் தயக்கமும் இன்றி நாங்கள் இன்னொருவரைப் பரிந்துரைப்போம்.
  • அவர்கள் பணிக்கு செலவிட்ட காலமே வித்தியாசம். எங்களில் சிலர் மற்றவர்களை விட அதிக அனுபவம் பெற்றவர்கள், ஆனால் கவலை கொள்ளாதீர், நாங்கள் அனைவரும் ஒரே மாதிரியான மிக உயர்ந்த தரத்தில் பயிற்சி பெற்றவர்கள், மேலும் எங்களது மருத்துவர்கள் மிகச்சிறந்த பட்டதாரி கல்வித் திட்டங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.
  • எங்களது சிகிச்சையாளர்கள் அரபு, ஸ்பானிஷ், பிரெஞ்சு, ரஷ்யன், மாண்டரின், தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ஆலோசனைகளை வழங்குகிறார்கள்.
  • நாங்கள் பொதுவாக பதட்டம்/கவலை, மன அழுத்தம், உறவுச் சிக்கல்கள், வேலை/வாழ்க்கைத்தொழில் தொடர்பான நெருக்கடிகள் மற்றும் வாழ்க்கை மாற்றங்கள் போன்றவற்றுக்கு நவீன, ஆதாரம் அடிப்படையிலான சிகிச்சையை வழங்குகிறோம்.

ஆலோசனை சந்திப்புகள் மற்றும் கட்டணம்

உங்களின் ரத்து செய்யும் கொள்கை என்ன?

உங்களுக்கு ஒவ்வொரு வாரமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை நாங்கள் ஒதுக்குகிறோம், எனவே உங்கள் ஆலோசனை சந்திப்பை ரத்து செய்ய வேண்டுமெனில் 48 மணிநேரத்திற்கு முன்பே தெரிவிக்க வேண்டும். சாத்தியமானவரை, உங்கள் சிகிச்சையாளரின் கால அட்டவணைக்கு ஏற்ப நேரத்தை மாற்றித் தர முயற்சிப்போம். ரத்து செய்யப்படும் அமர்வுகளுக்கு $150 கட்டணமாக வசூலிக்கப்படும், மேலும் இதை காப்பீடு மூலம் கோர முடியாது.

  • ஜனவரி 1, 2022 முதல், உங்களுக்குக் காப்பீடு இல்லையென்றாலோ அல்லது உங்கள் மருத்துவக் கட்டணத்தை நீங்களே செலுத்துபவராக இருந்தாலோ (உங்கள் உரிமைகோரல்களை உங்கள் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சமர்ப்பிக்க முடியாது), சேவையை அல்லது பொருளைப் பெறுவதற்கு முன்பு அதற்கான உத்தேசக் கட்டண விவரத்தை வழங்குவது சுகாதாரப் பராமரிப்பு வழங்குநர்கள் மற்றும் சேவை நிலையங்களின் கடமையாகும். இதுவே “நன்னம்பிக்கை மதிப்பீடு” என்று அழைக்கப்படுகிறது. நீங்கள் ஒரு சேவையை அல்லது பொருளைக் கோரினாலோ அல்லது ஒரு சேவைக்கு அல்லது பொருளுக்கு முன்பதிவு செய்தாலோ, வழங்குநர்கள் மற்றும் சேவை நிலையங்கள் இந்த நன்னம்பிக்கை மதிப்பீட்டை உங்களுக்கு வழங்க வேண்டும். இதில் நீங்கள் பெறும் முதன்மை சேவைக்கு அல்லது பொருளுக்கு எதிர்பார்க்கப்படும் கட்டணங்களும் அதே திட்டமிடப்பட்ட சேவையின் அல்லது பொருளின் பகுதியாக வழங்கப்படும் ஏதேனும் பிற சேவைகளுக்கு அல்லது பொருட்களுக்கு எதிர்பார்க்கப்படும் கட்டணங்களும் இடம்பெற்றிருக்க வேண்டும்.

  • நன்னம்பிக்கை மதிப்பீட்டைப் பெறுவதற்கு நீங்கள் தொடர்பு கொள்ளும் சேவை வழங்குநர் அல்லது சேவை நிலையம் உங்கள் பராமரிப்பு தொடர்பான அனைத்து சேவைகள் மற்றும் பொருட்களின் பட்டியலையும் வழங்க வேண்டும். 2022-ஆம் ஆண்டில், மற்றொரு வழங்குநரால் அல்லது சேவை நிலையத்தால் வழங்கப்படும் சேவைகளை அல்லது பொருட்களை இந்த மதிப்பீட்டில் சேர்க்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் நீங்கள் அவர்களிடம் தனியாக ஒரு மதிப்பீட்டைக்  கோரலாம். இருப்பினும், 2023 முதல், நீங்கள் தொடர்பு கொள்ளும் சேவை வழங்குநர் அல்லது சேவை நிலையம் துணை சேவை சேவை வழங்குநர் அல்லது துணை சேவை நிலையத்தின் செலவு விவரங்களையும் வழங்குவது அவசியமாக்கப்பட்டுள்ளது.

  • உதாரணமாக, நீங்கள் அறுவை சிகிச்சை செய்து கொள்கிறீர்கள் என்றால், அந்த மதிப்பீட்டில் அதற்கான செலவு, ஆய்வக சேவைகள் அல்லது பரிசோதனைகள் மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் மயக்க மருந்துக்கான செலவுகள் இடம்பெற்றிருக்கும், ஆனால் சில சந்தர்ப்பங்களில், அறுவை சிகிச்சைக்கு முந்தைய ஆலோசனை சந்திப்புகள் அல்லது அதற்குப் பிந்தைய வாரங்களில் செய்யப்படும் பிசியோதெரபி போன்ற தனியாக திட்டமிடப்பட்ட, இந்த அறுவை சிகிச்சைக்குத் தொடர்பான சேவைகள் அல்லது பொருட்கள் இந்த நன்னம்பிக்கை மதிப்பீட்டில் சேர்க்கப்படாமல் இருக்கலாம்.
  • சேவை வழங்குநர்களும் சேவை நிலையங்களும் பின்வருவனவற்றை வழங்க வேண்டும்:

  • சேவை அல்லது பொருளுக்கான முன்பதிவு செய்யப்படுவதற்கு முன்பே, குறிப்பட்ட காலக்கெடுவுக்குள் மதிப்பீட்டை வழங்க வேண்டும்.

  • ஒவ்வொரு சேவைக்கும் அல்லது பொருளுக்கும் தனித்தனியான பட்டியலை வழங்க வேண்டும். ஒவ்வொரு பொருளுக்கும் அல்லது சேவைக்கும் ஒதுக்கப்பட்ட ஆரோக்கியப் பராமரிப்புக் குறியீடு மற்றும் எதிர்பார்க்கப்படும் கட்டணம் போன்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

  • நீங்கள் கோரினால், தொலைபேசி வாயிலாகவோ நேரடியாகவோ இந்த நன்னம்பிக்கை மதிப்பீட்டை விளக்க வேண்டும், பின்னர் அதை எழுத்துப்பூர்வமாக (காகிதம் அல்லது மின்னணு முறையில்) வழங்க வேண்டும்.

  • உங்களுக்கு எளிதில் புரியும் வகையில் இந்த நன்னம்பிக்கை மதிப்பீட்டை வழங்க வேண்டும்.
  • இந்தச் சிகிச்சையைப் பொறுத்தவரையில், இதன் பொருள் என்னவென்றால், ஓர் அமர்வுக்கான உங்கள் கட்டணம் மற்றும் ரத்து செய்வதற்கான கட்டணம் குறித்த விவரங்கள் உங்களுக்குத் தெரிவிக்கப்படும். 

  • நாங்கள் கிரெடிட்/டெபிட் கார்டுகள் மற்றும் FSA/ HSA கார்டுகளை ஏற்றுக்கொள்கிறோம். சிறப்புச் சூழ்நிலைகளைத் தவிர, ரொக்கம் அல்லது காசோலையை நாங்கள் ஏற்பதில்லை.
  • விலங்கு ஆதரவுக் கடிதங்கள் தொடர்பான மாறிவரும் சட்டங்கள் மற்றும் பொறுப்புகள் காரணமாக, எங்களால் தற்போது இத்தகைய கடிதங்களை வழங்க இயலாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

©2026 Citron Hennessey Therapy