நியூயார்க் நகரில் நேரடி சிகிச்சை

உங்களை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்ட அமைதியான மற்றும் ஸ்பா போன்ற அலுவலகங்கள்

உங்கள் சிகிச்சையாளரைக் கண்டுபிடியுங்கள்

நேரில் சந்தித்து ஆலோசனை பெற விரும்பும் பயனாளிகளுக்கு, Citron Hennessey நிறுவனம் நியூயார்க் நகரத்தில் தனியுரிமையைப் பேணும் வகையில், சௌகரியமாக அமைக்கப்பட்டிருக்கும் எங்கள் டவுன்டவுன் அலுவலகத்தில் நேரடி சிகிச்சையை வழங்குகிறது.

எங்களது முகவரி:

37 மேற்கு 20வது ஸ்ட்ரீட், 4வது தளம் #407, நியூயார்க், NY 10011

எங்கள் அலுவலகம் அமைதியான சூழலில், கனிவுடன் வரவேற்கும் வகையில், தனிமையில் கலந்துரையாடக்கூடிய வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது, நகரத்தின் பரபரப்பான வாழ்க்கை சூழலிலிருந்து வேறுபட்டு நிஜமாகவே அமைதி நிலவும் இடமாக அமைந்துள்ளது. அமைப்பின் ஒவ்வொரு நுணுக்கமும் உங்களுக்குப் புத்துணர்ச்சியையும் மனநிம்மதியையும் உருவாக்கும் வகையில் தேர்வு செய்யப்பட்டுள்ளது, இது ஒரு வழக்கமான மனநல மருத்துவ மையத்தைப் போன்றிருக்காது. வசதியான இருக்கைகள் முதல் மனதுக்கு இதமான விளக்குகள் வரை அனைத்தும் கவனமாக அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், உங்கள் இரகசியத்தன்மையைப் பாதுகாக்கும் வகையில் நீங்கள் இங்கு வந்தடைந்த தருணத்தின் முதல் உங்களைச் சௌகரியமாக உணர வைக்கும் விதமாக எங்களின் அனைத்து அறைகளும் சத்தம் புகாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

யாருக்கு நேரடி சிகிச்சை பொருத்தமானது

நேரடி சிகிச்சை மற்றும் இணையவழி சிகிச்சை என இரண்டும் பயனுள்ளதாக இருக்குமென்றாலும், பலர் நேருக்கு நேர் சந்தித்து சிகிச்சை பெறுவது அதிகம் தொடர்பில் இருக்கும் உணர்வையும், தொலைநிலை சிகிச்சையைக் காட்டிலும் முழுக்கவனமும் செலுத்த உதவுவதாகவும் கருதுகிறார்கள். பின்வரும் நிலையில் நியூயார்க் நகரில் நேரடி சிகிச்சை பெறுவது உங்களுக்குச் சரியான தேர்வாக இருக்கலாம்:

  • உங்கள் வீடு அல்லது நீங்கள் வேலை செய்யும் இடம் அல்லாது தனிப்பட்ட சிகிச்சை இடத்தை நீங்கள் விரும்பினால்
  • முகபாவனை, சைகைகள் மற்றும் குரலின் தொனி போன்ற சொற்கள் அல்லாத குறிப்புகள் முழுவதையும் நீங்கள் தெரிவிக்க விரும்பினால்
  • முதன்முறையாக சிகிச்சையைத் தொடங்குபவராக இருந்து, நேரில் சென்று, சிகிச்சை குறித்த நம்பிக்கையைப் பெற வேண்டுமென விரும்பினால்
  • உங்களுக்கு தொழில்நுட்பம், இணைய இணைப்பைப் பற்றிய கவலைகள் இருந்தால் அல்லது உங்கள் வீட்டுச் சூழலில் அந்தரங்க விஷயங்களைப் பற்றி பேசுவது குறித்து உங்களுக்குக் கவலைகள் இருந்தால்
  • நுணுக்கமான விஷயங்களை நேரில் பேசுவதில் உங்களுக்கு அதிக சௌகரியம் இருந்தால்\
  • அமைதியான, ஆதரவான சூழலுக்குச் சென்று சிகிச்சை பெறும் ஒரு வழக்கத்தை அமைக்க விரும்பினால்

எங்கள் நியூயார்க் நகர சிகிச்சையாளர்கள் வழங்கும் சேவைகள்

Citron Hennessey நிறுவனத்தில் உள்ள எங்கள் உரிமம் பெற்ற சிகிச்சையாளர்கள், தனிநபர்கள் தெளிவுப் பெற்று, பின்வரும் விஷயங்களுக்கு வழிகாட்டுதலைப் பெற உதவும் வகையில் பல்வேறு சிறப்புப் பயிற்சிகளைப் பெற்றுள்ளனர்:

வாழ்க்கை மாற்றங்கள்

மனச்சோர்வு

கவலை

பரிபூரணத்திறம் மற்றும் சுயத்தை மதிக்கும் இயல்பு

பெருவிருப்பக் கட்டாய மனப்பிறழ்வு

உறவுகளுக்குள் ஏற்படும் பிரச்சனைகள்

கோபத்தை நிர்வகிப்பது

எங்கள் சிகிச்சை சேவைகளில் புலனுணர்வு நடத்தை சார்ந்த சிகிச்சை (CBT), தனிநபர் சிகிச்சை மற்றும் தம்பதிகள் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு முறைகள் மற்றும் சிகிச்சை வகைகள் அடங்கும்.

எங்கள் சிகிச்சையாளர்கள் குழு, நீங்கள் நிறைவான வாழ்க்கையையும் மேம்பட்ட நல்வாழ்வையும் நோக்கி முன்னேற உதவும் பரிவு மிகுந்த மனநலப் பராமரிப்பை வழங்கிட, பல்வேறு ஆதார அடிப்படையிலான சிகிச்சை அணுகுமுறைகளைப் பயன்படுத்துகின்றனர்.

 

நியூயார்க் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள எங்கள் மையத்திற்கு வருகைப் புரியுங்கள்

எங்கள் அலுவலகம் செல்சி, ஃபிளாடிரான், நோமேட் மற்றும் யூனியன் ஸ்கொயர் பகுதியில் வாழும் மக்களுக்கு வசதியான முறையில் அமைந்துள்ளது, எனவே வேலை நேரத்துக்கு முன், மதிய உணவு இடைவேளையின்போது அல்லது வேலை நேரத்திற்குப் பிறகு என நீங்கள் சிகிச்சை பெறுவதற்கு எளிதாக திட்டமிடலாம்.

நியூயார்க் நகரில் நேரடி சிகிச்சையின் நன்மைகளான கவனம், இணைப்பு மற்றும் சௌகரியத்தை அனுபவிக்க நீங்கள் தயாராக இருந்தால், உங்களுக்குப் பொருத்தமான சிகிச்சையாளர் குறித்த எங்களின் பரிந்துரையைப் பெற எங்கள் சிறிய கேள்விப்பட்டியலை நிரப்பவும். உங்கள் முதல் அமர்வை முன்பதிவு செய்வதற்கு முன் ஏதேனும் கேள்விகளைப் பற்றி விவாதிக்க எங்களை நீங்கள் நேரடியாகவும் தொடர்பு கொள்ளலாம்.