எங்களைப் பற்றிய அறிமுகம்

உங்கள் சிகிச்சையாளரைக் கண்டறியுங்கள்

உங்கள் சிகிச்சையாளரைக் கண்டறியுங்கள்

2015 ஆம் ஆண்டு Citron Hennessey Therapy ஆனது, பென் மற்றும் லென் என்ற இரு நண்பர்களால் தொடங்கப்பட்டது; நாங்கள் கலை மற்றும் நிதித் துறைகளில் வெற்றிகரமாக பணிகளை மேற்கொண்ட பின்னர் ஆலோசகர்களாக பயிற்சி மேற்கொண்டுள்ளோம். நாங்கள் இருவரும் விருது பெற்ற இலாப நோக்கமற்ற மருத்துவ மையங்களை நடத்தி வரும் துறையில் பல வருடம் அனுபவம் பெற்றுள்ளோம், அத்துடன் கூடுதல் பேராசிரியர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் சொற்பொழிவாளர்களாகவும் பணியாற்றியுள்ளோம். பெனட் அவர்கள் ‘The Institute for Human Identity’ என்ற அமைப்பின் கௌரவ இயக்குநராகவும், லியோனார்ட் அவர்கள் ‘The Albert Ellis Institute’ என்ற அமைப்பின் சக உறுப்பினராகவும் உள்ளார். அனைவரும் வரவேற்கக்கூடிய, நவீன மற்றும் ஆதாரம் அடிப்படையிலான சிகிச்சை முறையின் தேவையை உணர்ந்து, பயனாளிக்கு கிடைக்கக்கூடிய அனுபவத்தை மேம்படுத்தவும், பழையக்கால சிகிச்சை முறையை மாற்றி நவீனப்படுத்தவும் நாங்கள் முடிவு செய்தோம். எங்கள் பயனாளி பெறும் அனுபவமானது நவீனத் தொழில்நுட்பம், மிகச்சிறந்த மருத்துவ நிபுணர்கள், ஒருங்கிணைந்த ஆதரவு மற்றும் உண்மையில் அக்கறை கொண்ட தனிநபர் சார்ந்த அணுகுமுறை ஆகியவற்றின் அடிப்படையில் அமைய வேண்டுமென நாங்கள் விரும்பினோம்

சிறந்த சிகிச்சையின் உண்மையான வெற்றி, சிகிச்சையாளர்களின் நிபுணத்துவத்திலும், சிகிச்சையாளர் மற்றும் பயனாளிக்கு இடையிலுள்ள உறவின் தரத்திலுமே உள்ளது. எங்கள் மையத்தின் நிபுணர்களைத் தேர்ந்தெடுக்க நாங்கள் கடுமையான தேர்வு முறையைப் பின்பற்றுகிறோம், அவர்கள் எங்கள் குழுவில் அங்கத்தினராக பணிபுரியும் காலம் வரையில் அவர்களுக்குத் தொடர்ந்து பயிற்சியளித்து வருகிறோம். இணையம் வாயிலாகவோ அல்லது நேரடியாகவோ முதல் தர சிகிச்சையாளர்களுக்கான அணுகலை வழங்குவதன் மூலம், மாற்றத்தின் சக்தியை உங்கள் கரங்களில் அளிக்கிறோம்.

சிகிச்சை பெறுவதை எளிமையாகவும் மன அழுத்தம் அற்றதாகவும் மாற்ற, நாங்கள் நவீன மற்றும் பாதுகாப்பான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறோம், இதன் மூலம் துரிதமான முன்பதிவு, தகவல் பரிமாற்றம், இணையம் வாயிலான அமர்வுகள் மற்றும் தானியங்கி கட்டணச் சேவை ஆகியவற்றை வழங்குகிறோம். மேலும், எங்களின் அதிநவீன ‘டிஜிட்டல் உடல்நலப் பதிவேடு (டிஜிட்டல் ஹெல்த் ரெக்கார்ட்)’ தளத்தின் மூலம், தடையற்ற மற்றும் தரமான பராமரிப்பை வழங்குவதை நாங்கள் உறுதி செய்கிறோம்

இறுதியாக, தனிநபர் சேவையின் முக்கியத்துவத்தை நாங்கள் அடையாளம் கண்டு, உண்மையில் அக்கறை கொள்ளும் தனிநபரை மையமாகக் கொண்ட அணுகுமுறையை வழங்குவதை இலக்காகக் கொண்டுள்ளோம். உங்கள் சிகிச்சைக்காக எங்களை நீங்கள் தேர்ந்தெடுக்கையில், Citron Hennessey வழங்கும் சிகிச்சையானது எளிதில் அணுகும் விதமாகவும், தடையற்றதாகவும், சௌகரியமாகவும், உங்கள் வாழ்க்கையையே மாற்றக்கூடிய ஒன்றாகவும் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

– பெனட் மற்றும் லியோனார்ட்

Two women talking at Cobble Hill Therapy.

எங்களைத் தேர்வு செய்வதற்கான காரணங்கள்

Citron Hennessey இல், பின்வரும் விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் தனியார் சிகிச்சை மையத்தை நடத்தி வருகிறோம்:

நியாயமான கட்டணம்

எங்களின் கட்டணங்கள் FAIRHealth அமைப்புக்கு இணங்க உள்ளன (FAIRHealth என்பது ஒரு சுயாதீன, இலாப நோக்கமற்ற ஒழுங்குமுறை அமைப்பு).

பயனாளிகளின் திருப்தி

94%க்கும் மேற்பட்ட பயனாளிகள் எங்களின் சிகிச்சையின் மூலம் “முழுவதும் திருப்தி” அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தரக் கட்டுப்பாடு

உங்களுக்குப் பொருத்தமான ஆலோசனை வழங்கும் சிகிச்சையாளரைத் தேர்வு செய்ய உதவுகிறோம், உங்கள் சிகிச்சையின் முன்னேற்றம் குறித்து எப்போது வேண்டுமானாலும் நீங்கள் எங்களுடன் பேசலாம்.

உதவி விவரங்கள் 

எங்களின் விரிவான கட்டமைப்பின் மூலம், பல்வேறு நிபுணர்கள், மனநல மருத்துவர்கள், NPகளுக்கான அணுகலையும், பொருத்தமான இடங்களில் மேற்படி நிபுணர் பரிந்துரைகளையும் நாங்கள் வழங்குகிறோம்.

அனுபவம்

Citron Hennessey, நியூயார்க்கின் பல முன்னணி பட்ட மேற்படிப்புப் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்ற பயிற்சி வழங்குநராக உள்ளது. மேலும், அதன் நிறுவனர்கள் விருது பெற்ற நிறுவனங்களை நடத்துதல், கற்பித்தல் மற்றும் விளக்கக்காட்சிகளை வழங்குதல் ஆகியவற்றில் அனுபவம் வாய்ந்தவர்களாக உள்ளனர்.

பலன்கள்

நவீன, ஆதார அடிப்படையிலான மற்றும் பலனளிக்கக்கூடிய சிகிச்சை முறையை நாங்கள் பயன்படுத்துகிறோம், இச்சிகிச்சை முறை செயல்திறன் மிக்கதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

A person participates in therapy.

வாருங்கள் தொடங்கலாம்

உங்கள் சிகிச்சையாளரைக் கண்டறியுங்கள்

©2026 Citron Hennessey Therapy